‘ஷாக் கொடுக்கும் தங்கம்’: இன்றைக்கும் விலை உயர்வு…வாடிக்கையாளர்கள் கவலை..!!

19 April 2021, 1:21 pm
gold rate today - updatenews360
Quick Share

சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.4460க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.35,680க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.38,552க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 30 பைசா குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ரூ.73.40க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.73,400 ஆக உள்ளது.

Views: - 37

0

0