நீண்ட நாட்களுக்கு பிறகு ரூ.38,000க்கு கீழ் சரிந்தது தங்கம் விலை..! எவ்வளவு தெரியுமா..?

28 September 2020, 4:00 pm
Gold Rate - Updatenews360
Quick Share

கடந்த வாரம் முழுவதும் இறங்கு முகமாகவே இருந்து வந்த தங்கத்தின் விலை, இந்த வாரமும் சரிவுடனேயே தொடங்கியுள்ளது.

நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.

இதற்கிடையே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறியும், இறங்கியும் வாடிக்கையாளர்களிடம் கண்ணாம் பூச்சி விளையாடி வருகிறது

அந்த வகையில்,இந்த வாரம் முழுவதும் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்த தங்கம் விலை நிலவரம், இன்றும் குறைந்தே காணப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,160க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமிற்கு ரூ.10 சரிந்து ரூ.4,770-க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு உயர்ந்து ரூ.62.30-க்கு வர்த்தகமாகியது.

இந்த நிலையில், மாலையிலும் தங்கத்தின் விலை சரிந்தே காணப்பட்டுள்ளது. மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலை ரூ. 38 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.30 சரிந்து ரூ.4,740-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசு உயர்ந்து ரூ.61.70-க்கு வர்த்தகமாகி வருகிறது.

Views: - 0 View

0

0