சரிந்தது சவரன்! ரூ.1008 குறைந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!!

20 August 2020, 3:11 pm
Gold -Updatenews360
Quick Share

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகமே பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், ரியல் எஸ்டேஸ், பங்கு சந்தை போன்றவற்றின் மீது ஆர்வம் காண்பித்து வந்த முதலீட்டாளர்கள், பாதுகாப்பான முதலீட்டான தங்கத்தின் பக்கம் கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர்.

இதனால், உலக வரலாறு காணத வகையில் தங்கத்தின் விலை சமீபத்தில் சவரனுக்கு 40 ஆயிரத்திற்கும் கீழ் குறையாமலேயே இருந்து வருகிறது.

ஆபரண தங்கம் சவரனுக்கு 45 ஆயிரத்தையும் கடந்து விற்பனை ஆனது. இந்த சூழலில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை கனிசமாக குறைந்து வருகிறது.

அந்த வகையில், இன்று ஒரு கிராம் ரூ.126 குறைந்து ரூ.5040க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1008 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1008 குறைந்து ரூ.40,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Views: - 34

0

0