சற்றே அதிகரித்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.36,904க்கு விற்பனை..!!

18 January 2021, 3:40 pm
gold - Updatenews360
Quick Share

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.36,904க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ.5 அதிகரித்து ரூ.4,613க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.69.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 300 அதிகரித்து, ரூ.70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சனிக்கிழமையன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்தது. சமீபகாலமாக தங்கத்தின் விலை தாறுமாறாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஜனவரி 9ம் தேதி முதல் தங்கம் விலை சரிந்து வந்த நிலையில், ஜனவரி 13ம் தேதி வெகுவாக விலை குறைந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை கடுமையாக குறைந்தது. இது தங்கம் வாங்க திட்டமிட்டிருப்போரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு சவரனுக்கு ரூ.5 அதிகரித்து, ரூ.4,613க்கு விற்பனையாகிறது.