நேத்து நல்லா இருந்துச்சா.. மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்கம்!

Author: Hariharasudhan
8 November 2024, 10:29 am

நேற்று விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு கிராம் தங்கம் ரூ.85 உயர்ந்து, ரூ.7,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: தீபாவளி திருநாள் விடுமுறையையொட்டி தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம், கடந்த 2 நாட்களாக இறங்குமுகத்திலே காணப்பட்டது. மேலும், ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினங்கள் இருந்தாலும், தங்கம் விலை கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று திடீரென தங்கம் விலை கிராமுக்கு 150 ரூபாய்க்கு மேல் குறைந்தது.

மேலும், நிறைவுப் பகுதியை எட்டிய அமெரிக்க அதிபர் தேர்தலாலும், தங்கம், பிட்காயின் உள்ளிட்டவற்றின் மதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக வணிக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, இன்று (நவ.8) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 85 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 285 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

GOLD price

இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 58 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 790 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: காணாமல் போன நகை.. திடீரென பார்த்திபன் வைத்த ட்விஸ்ட்!

மேலும், ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் உயர்ந்து 103 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 278

    0

    0