ஏப்.1ல் வாடிக்கையாளர்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த தங்கம் விலை: அதிரடியாக சவரனுக்கு ரூ.512 உயர்வு..!!

1 April 2021, 11:49 am
gold rate today - updatenews360
Quick Share

சென்னை: கடந்த 2 நாட்களாக இறங்கு முகமாக இருந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 அதிகரித்துள்ளது.

மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்தது. இதற்கிடையே 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதன் பிறகு தங்கம் விலை ஏற்றம் – இறக்கமாகவே உள்ளது.

இந்நிலையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. ஆனால் இன்று
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.33,808க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.64 உயர்ந்து ரூ.4,226க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசு அதிகரித்து ரூ.68.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 0

0

0