இன்று தடாலடியாக குறைந்தது தங்கத்தின் விலை : வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

2 September 2020, 10:56 am
Gold Rate - Updatenews360
Quick Share

சென்னை : கடந்த இரு தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது.

கொரோனா சமயத்தில் தங்கம் வாங்க யாரும் முன்வராத நிலையில், வர்த்தக வரலாற்றில் இல்லாத அளவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. இது பொதுமக்களின் தங்கம் வாங்கும் திறனை முற்றிலும் அழித்து விட்டது. கடந்த சில நாட்களாக எப்படி உயர்ந்தோ, அதே போல இறங்கி வந்தது.

ஆனால், கடந்த இரு தினங்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இதனால், வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 384 சரிந்து மகிழ்ச்சியூட்டியுள்ளது.

இன்றைய காலை நேர நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.48 சரிந்து ரூ. 4,916 ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.384 அதிகரித்து ரூ. 39,328க்கும் வர்த்தகமாகிறது. இதேபோல, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.80 குறைந்து ரூ.76.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 0

0

0