தங்கம் வாங்கனும்னா இப்பவே கடைக்கு கிளம்புங்க : 4வது நாளாக இன்றும் சரிந்தது

18 February 2021, 11:20 am
gold - Updatenews360
Quick Share

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்திருப்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும், பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களை போலவே, தங்கம் விலை இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.35,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் ரூ. 14 குறைந்து ரூ.4,380 க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Views: - 5

0

0