இன்னும் குறையுமா ..? 4வது நாளாக இறங்கு முகமாகவே இருக்கும் தங்கம் விலை..!!
26 November 2020, 12:43 pmQuick Share
கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்றும் சற்று குறைந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள் அதிகரிப்பினால் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இதனால், ரூ.38 ஆயிரத்தை கடந்தும், குறைந்தும் வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை சரிந்து காணப்படுகிறது. இதனால், மீண்டும் தங்கம் விலை ரூ.37 ஆயிரத்திற்கு கீழாக சென்றது.
இந்த நிலையில், 4வது நாளாக தங்கம் விலை இன்றும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.4,607-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.56 சரிந்து ரூ.36,856-க்கு விற்பனையாகிறது. அதேபோல, சென்னையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Views: - 2
0
0