இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறும் தங்கம் விலை : 2வது நாளாக இன்றும் விலை உயர்வு..!!

2 December 2020, 11:31 am
Gold Rate - Updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, 2வது நாளாக இன்றும் சற்று உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள் அதிகரிப்பினால் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இதனால், ரூ.50 ஆயிரத்தை கடந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த வாரத்தில் இருந்தே தங்கத்தின் விலை சரிந்து காணப்படுகிறது. இதனால், மீண்டும் தங்கம் விலை ரூ.37 ஆயிரத்திற்கு கீழாக சென்றது.

இந்த நிலையில், நேற்று தங்கம் விலை உயர்வுடன் காணப்பட்ட நிலையில், 2வது நாளாக இன்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.4,574-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.384 அதிகரித்து ரூ.36,592-க்கு விற்பனையாகிறது. அதேபோல, சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.66.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 29

0

0