‘கொரோனா மட்டுமல்ல தங்கம் விலையும் வீரியம்தான்’ : சவரன் ரூ.39,000த்தை கடந்தது

Author: Babu
6 January 2021, 4:13 pm
gold rate 10- updatenews360- updatenews360
Quick Share

2021ம் ஆண்டின் முதல் வாரமே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வுடனேயே இருப்பது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள் அதிகரிப்பினால் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. கடந்த வாரத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால், தங்கம் விலை ரூ.38 ஆயிரத்தை கடந்தும், குறைந்தும் விற்பனையாகியது. தொடர்ந்து ஏற்றம், இறக்கமாக காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை, இந்தப் புத்தாண்டிலாவது குறைந்து காணப்படுமா..? என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

மாறாக, புத்தாண்டின் முதல் வாரத்தில் தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இந்த வார வர்த்தகத்தில் உயர்வுடனே இருந்து வரும் தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.232 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் தங்கம் விலை ரூ.232 அதிகரித்து ரூ.39,080ஆக விற்பனையாகிறது. இதன்மூலம், தங்கம் விலை ரூ. 39,000த்தை தாண்டியது. கிராமுக்கு ரூ.29 உயர்ந்து ரூ.4,856க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 83

0

0