இன்றும் உயர்வுடன் தங்கம் விலை : சவரன் ரூ.39,000த்தை தாண்டியது

7 November 2020, 10:58 am
Quick Share

கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்றும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறுமாகவே இருந்து வருகிறது. நேற்று, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 அதிகரித்து ரூ.38,936க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்தே காணப்பட்டுள்ளது. காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.39,072க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம், தங்கம் விலை மீண்டும் 39 ஆயிரத்தை கடந்தது. கிராமிற்கு ரூ.17 உயர்ந்து ரூ.4,884-க்கு விற்பனையாகி வருகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது, தங்கம் வாங்க நினைப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும் என்றே தெரிகிறது.

Views: - 52

0

0