வாரத்தின் முதல் நாளை மகிழ்ச்சியுடன் தொடங்கிய தங்கம் : சவரனுக்கு ரூ.232 குறைவு!!

17 August 2020, 11:09 am
Gold Rate - Updatenews360
Quick Share

சென்னை : கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று காலையிலும் குறைந்தே காணப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக, அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், திருமணம் உள்ளிட்ட எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளும் நடத்துவது குறைந்துவிட்டது. அப்படி மீறி நடந்தாலும் எளிய முறையில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தங்கம் வாங்குவது குறைந்து, அதன் இறக்குமதியும் குறைந்துவிட்டது.

இருப்பினும், வர்த்தக வரலாற்றில் இல்லாத அளவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே சென்றது. இது பொதுமக்களின் தங்கம் வாங்கும் திறனை முற்றிலும் அழித்து விட்டதாக உள்ளது. தொடர்ந்து ஏறு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, கடந்த ஒரு வாரமாக இறங்கி வந்தது.

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்றும் தங்கத்தின் விலை சரிந்தே காணப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ. 29 குறைந்து ரூ. 5,071 ஆக விற்பனையானது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.232 ரூ. 40,568க்கும் விற்பனையானது.

கடந்த சில நாட்களை போல, எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை இறங்கு முகமாகவே இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Views: - 0

0

0