‘இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்ல’ : ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை..!!
17 November 2020, 11:24 amதீபாவளி பண்டிகை முடிந்த பிறகு அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை, இன்று சற்று ஆறுதல் அளித்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறுமாகவே இருந்து வந்தது. இதன் காரணமாகவே, கடந்த வாரம் சவரன் தங்கம் ரூ. 39,000த்தை தாண்டியது. பின்னர், யாரும் எதிர்பார்க்காத விதமாக, கடந்த வாரம் தொடர்ந்து இறங்கு முகமாகவே இருந்து வந்தது. இதனால், தங்கம் விலை மீண்டும் ரூ.39,000த்திற்கு கீழாக சென்றது.
இந்த மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடிய மக்களுக்கு, பண்டிகை முடிந்த மறுநாளே, விலை உயர்ந்து தங்கம் விலை அதிர்ச்சி கொடுத்தது.
இந்த நிலையில், இன்று சற்று குறைந்து ஆறுதலை அளித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4801 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 சரிந்து ரூ.38,408க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.300 குறைந்து 68,1000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.