வார வர்த்தகத்தின் முதல் நாளில் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்திய தங்கம் விலை!!

23 November 2020, 11:29 am
gold rate 10- updatenews360- updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்றும் சற்று உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள் அதிகரிப்பினால் கடந்த வாரங்களில் ஏறுமுகமாகவே தங்கம் விலை இருந்து வந்தது. இதனால், ரூ.38 ஆயிரத்திற்கு குறைவாக இருந்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் ரூ. 38,000த்திற்கு கூடுதலானது.
இந்த நிலையில், வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4,752 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.64 சரிந்து ரூ.38,016க்கு விற்பனையாகிறது. அதேபோல, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை குறைந்து மீண்டும் ரூ.38 ஆயிரத்திற்கு கீழ் செல்ல வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Views: - 33

0

0