தொடர்ந்து ஏறி இறங்கும் தங்கத்தின் விலை : இன்னைக்கு ‘ஹேப்பி அண்ணாச்சி’..!

28 August 2020, 4:00 pm
gold - updatenews360
Quick Share

சென்னை : கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக காணப்பட்டு வரும் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

கொரோனா சமயத்தில் தங்கம் வாங்க யாரும் முன்வராத நிலையில், வர்த்தக வரலாற்றில் இல்லாத அளவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. இது பொதுமக்களின் தங்கம் வாங்கும் திறனை முற்றிலும் அழித்து விட்டது. கடந்த சில நாட்களாக எப்படி உயர்ந்தோ, அதே போல இறங்கி வந்தது. நேற்று ஏறுமுகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து ஆறுதல் அளித்துள்ளது.

இன்றைய மாலை நேர நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ. 4897ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.320 சரிந்து ரூ. 39,176க்கும் வர்த்தகமாகிறது. இதேபோல, சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71-க்கு விற்பனை செய்யப்படுகிறது

Views: - 0

0

0