‘ஸ்வீட் எடு கொண்டாடு’ : தீபாவளிக்காக இல்லீங்க…. ‘அதுக்கும் மேல’ .. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,248 சரிவு!!

10 November 2020, 10:51 am
Gold -Updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாக ஏறுமுகமாகவே இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்றும் கிடுகிடுவென குறைந்துள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறுமாகவே இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ. 1,200க்கும் மேலாக உயர்ந்து காணப்பட்டது. இதன் காரணமாகவே, கடந்த வாரம் சவரன் தங்கம் ரூ. 39,000த்தை தாண்டியது.

இந்த நிலையில், பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக, தங்கம் விலை கிடுகிடுவென சரிந்தே காணப்பட்டுள்ளது.

காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,248 குறைந்து ரூ.38,128க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.156 சரிந்து ரூ.4,766-க்கு விற்பனையாகி வருகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது, தங்கம் வாங்க நினைப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாயிருந்தது. ஆனால், தற்போது, அனைத்தையும் உதறி தள்ளி விட்டு, பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடும் மனநிலையை இந்த விலை குறைவு ஏற்படுத்தியுள்ளது.

Views: - 78

0

0