எல்லாம் நடிப்பா…!!! இறங்கிய வேகத்தில் மீண்டும் எகிறும் தங்கத்தின் விலை..!!

19 October 2020, 4:19 pm
gold rate 10- updatenews360- updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறியும், இறங்கியும் வாடிக்கையாளர்களிடம் கண்ணாம் பூச்சி விளையாடி வருகிறது

ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை நெருங்கி வரும் சூழலில், கடந்த வாரம் இறுதியில் முதல்முறையாக தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,464 குறைந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

அந்த சந்தோஷத்தை பறிக்கும் விதமாக, இன்று விலை உயர்வு காணப்பட்டுள்ளது. அதாவது, காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,520க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமிற்கு ரூ.10 அதிகரித்து ரூ.4,690-க்கு விற்பனையாகியது.

இந்த நிலையில், மாலைநேர நிலவரப்படி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.37,672க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.29 அதிகரித்து ரூ.4,709-க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,300 உயர்ந்து, ரூ.66,700க்கு வர்த்தகமாகி வருகிறது.

Views: - 7

0

0