ஆரம்பமே அட்டகாசம்… தங்கம் விலை ரூ. 192 அதிகரிப்பு

1 March 2021, 12:44 pm
Gold Rate - Updatenews360
Quick Share

சென்னை : கடந்த சில நாட்களாக சரிவுடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும், பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது.

கடந்த வாரம் இறங்குமுகமாகவே இருந்த தங்கம் விலை, இந்த வாரத்தை கிடுகிடுவென உயர்வுடன் தொடங்கியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ.34,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் ரூ.24 உயர்ந்து ரூ.4,355க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Views: - 24

0

0