தங்கம் வாங்கும் கனவை தகர்த்த விலை உயர்வு..!! மீண்டும் ரூ. 39,000-த்தை நெருங்கியது

6 November 2020, 3:54 pm
gold rate 10- updatenews360- updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்றும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், தங்கம் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று காலையும் உயர்ந்தே காணப்பட்டுள்ளது. காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரித்து ரூ.38,712க்கு விற்பனையாகியது. கிராமிற்கு ரூ.29 உயர்ந்து ரூ.4,839-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று மாலையிலும் தங்கம் விலை உச்சத்தை தொட்டுள்ளளது. அதன்படி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 அதிகரித்து ரூ.38,936க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.57 உயர்ந்து ரூ.4,867-க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2 உயர்ந்து ரூ. 69.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது, தங்கம் வாங்க நினைப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Views: - 27

0

0