இறங்கி இறங்கி ஏறும் தங்கம் விலை : மீண்டும் ரூ. 37 ஆயிரத்தை தாண்டியது..!!

11 December 2020, 11:12 am
Gold Rate - Updatenews360
Quick Share

கடந்த இரு தினங்களாக இறங்குமுகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள் அதிகரிப்பினால் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. கடந்த வாரத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால், மீண்டும் தங்கம் விலை ரூ.38 ஆயிரத்தை எட்டி விடும் என்ற அச்சம் எழுந்தது.

ஆனால், கடந்த இரு தினங்களாக தங்கம் விலை கிடுகிடுவென சரிந்தது. இதனால், சவரன் விலை ரூ.37 ஆயிரத்திற்கு குறைந்தே காணப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை ரூ. 136 அதிகரித்துள்ளது. இன்று காலைநேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.4,639-க்கும், சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.37,112-க்கு விற்பனையாகிறது. அதேபோல, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 4

0

0