மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை : வாடிக்கையாளர்கள் அதிருப்தி

16 April 2021, 11:31 am
Gold-Updatenews360
Quick Share

சென்னை : கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும், பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. இதனால், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.35,424க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.4,428க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளியின் விலை 300 அதிகரித்து ரூ.73,400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Views: - 21

0

0