தீபாவளி முடிந்ததும் வாடிக்கையாளர்களுக்கு ‘ஷாக்’ : ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை..!!

16 November 2020, 11:12 am
gold rate 10- updatenews360- updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறுமாகவே இருந்து வந்தது. இதன் காரணமாகவே, கடந்த வாரம் சவரன் தங்கம் ரூ. 39,000த்தை தாண்டியது. பின்னர், யாரும் எதிர்பார்க்காத விதமாக, கடந்த வாரம் தொடர்ந்து இறங்கு முகமாகவே இருந்து வந்தது. இதனால், தங்கம் விலை மீண்டும் ரூ.39,000த்திற்கு கீழாக சென்றது.

இந்த மகிழ்ச்சியிலேயே தீபாவளியை கொண்டாடிய மக்களுக்கு, பண்டிகை முடிந்த மறு நாளே தங்கம் விலை அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 உயர்ந்து ரூ.4821 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.38,568க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ரூ1.10 உயர்ந்து 68.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Views: - 19

0

0