தங்கம், வெள்ளியின் விலை உச்சம்…! முகூர்த்த நாளில் பொதுமக்களுக்கு அதிர்ச்சி..!

31 August 2020, 11:18 am
Gold Rate - Updatenews360
Quick Share

சென்னை : கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக காணப்பட்டு வரும் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது.

கொரோனா சமயத்தில் தங்கம் வாங்க யாரும் முன்வராத நிலையில், வர்த்தக வரலாற்றில் இல்லாத அளவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. இது பொதுமக்களின் தங்கம் வாங்கும் திறனை முற்றிலும் அழித்து விட்டது. கடந்த சில நாட்களாக எப்படி உயர்ந்தோ, அதே போல இறங்கி வந்தது. இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.

இன்றைய காலை நேர நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ. 4,943 ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.128 அதிகரித்து ரூ. 39,544க்கும் வர்த்தகமாகிறது. இதேபோல, சென்னையில் ஒரு கிலோ வெள்ளி 1,300 உயர்ந்து ரூ.72,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 0

0

0