லஞ்ச ஒழிப்பு சோதனையில் ஒரே நாளில் பல கோடி ரூபாய் பறிமுதல்

7 November 2020, 7:08 pm
Quick Share

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் 4 கோடியே 30 லட்ச ரூபாய், 519 சவரன் தங்கம் கைப்பற்றப்பட்டதுடன் லஞ்சம் பெற்ற அரசு அலுவலர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்டோபர் 1 முதல் நவம்பர் 6 வரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை 54 அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டது. இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.4,29,98,000/-, 519 சவரன் தங்கம், 6 1/2 கிலோ வெள்ளி ஆகியன கைப்பற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்ட அலுவலர்களைப் பொறிவைத்துப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 16 அரசு அலுவலர்கள் லஞ்சம் பெறும்போது கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

Views: - 25

0

0

1 thought on “லஞ்ச ஒழிப்பு சோதனையில் ஒரே நாளில் பல கோடி ரூபாய் பறிமுதல்

Comments are closed.