மகனுக்கு வாய்ப்பு தேடிய மாற்றுத்திறனாளி தந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

By: Udayachandran
15 October 2020, 5:42 pm
Handicap Cricketer- Updatenews360
Quick Share

திருப்பூர் : மகனுக்கு வாய்ப்பு தேடிய நிலையில் மாற்றுத்திறனாளி தந்தைக்கு வாய்ப்பு கிடைத்ததை ஊர்மக்கள் வெகுவாக பாராட்டி ஊக்குவித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சார்ந்தவர் லட்மணன் @ லக்ஷ்மணகாந்தன் மாற்றுத்திறனாளி . தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணிக்கு கடந்த மாதம் தேர்வாகினார்.மேலும் அடுத்த மாதம் துபையில் நடைபெறும் டி.பி.எல்.போட்டியில் சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்கு விளையாட உள்ளார். இவரை மாவட்ட நிர்வாகம் பாராட்டி ஊக்குவிக்கவேண்டும் என கிரிக்கெட் ஆதரவாளர்களின் கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சார்ந்தவர் மாற்றுத்திறனாளி லட்சுமணன் என்கிற லக்ஷ்மணகாந்தன்(வயது 47). இவருக்கு 5 வயது இருக்கும் போது இளம்பிள்ளைவாதம் (போலியோ) என்ற நோய் தாக்கியதில் இடது கை,மற்றும் இடது கால் பாதிப்படைந்தது.

ன்னர் 1999 ஆண்டு பானுமதி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு நவீன் பாலாஜி என்ற மகன் உள்ளார். லக்ஷ்மணகாந்தனுக்கு சிறுவயது முதலே கிரிக்கெட்டின் மீது தீராத காதல் ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக எங்கு கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் ஆர்வத்துடன் பார்க்கச் சென்றுவிடுவார்.

இவருடைய மகனுக்கு எப்படியாவது கிரிக்கெட் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்த லட்சுமணன் திருப்பூர் பகுதிகளில் உள்ள பயிற்சி முகாம்களில் பயிற்சி கொடுக்க அழைத்து சென்று உள்ளார் . லட்சுமணன் மனைவி பானுமதி ஒரு தனியார் ஆடிட்டர் அலுவகத்தில் பணிபுரிந்து வந்தார் .

அப்போது ஆடிட்டர் மற்றும் அவர்களது நண்பர்கள் தங்களது இடமே காலியாக உள்ளது என அதில் கிரிக்கெட் மைதானம் அமைத்து கொடுத்து, இவரது மகனுக்கும் மற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இலவச பயிற்சி கொடுக்க உதவி புரிந்துள்ளளனர்.

இதன் பின்னர் 2012 ஆண்டு முதல் விளையாட்டு மைதானம் அமைத்து தனி ஒரு அணி உருவாக்கி அதில் விளையாடி வந்துள்ளார். இந்த மைதானத்தில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடத்தியும் உள்ளார் .

மேலும் பிறமாவட்டங்களில் இருந்து பல அணிகள் இங்குவந்து தொடர் போட்டிகளில் கலந்துகொண்டும் உள்ளனர் . அது போல் இந்த வருடம் 5 ஒருநாள் போட்டிகளில் கலந்து கொள்ள 14 வயதிற்கு உட்பட்ட அரியலூர் அணியும் காங்கேயம் அணியும் விளையாடி வந்தவேளையில், லட்சுமணன் அவருடைய மகனுக்கு வலைப்பயிற்சியில் ஈடுபடுத்தி பயிற்சி கொடுத்துள்ளார்.

இதைப்பார்த்த அரியலூர் பயிற்சியாளர் வெங்கடேஷ், லட்சுமணனிடம் நீங்கள் ஏன் மாற்றுத்திறனாளி அணிக்கு முயற்சி செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார் . அதற்க்கு லட்சுமணன் தனது மகனுக்கு பயிற்சி கொடுக்கவே நான் கிரிக்கெட் விளையாடி வருவதாகவும் தெரிவித்து தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் பயிற்சியாளர் வெங்கடேஷ் தூண்டுதலில் பெயரில் கட்டாயம் அடுத்த மாதம் தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணித்தேர்வு நடைபெறுகிறபோது அதில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.

பின்னர் ஆழ்ந்து சிந்தித்து கலந்துகொண்ட மாற்றுத்திறனாளி லட்சுமணன் தமிழக அணியான சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்கு தேர்வுசெய்யப்பட்டார். மேலும் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் வருகின்ற நவம்பர் மாதத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி துபாயில் நடக்க உள்ளது. இதில் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் என 5 அணிகள் விளையாட உள்ளது.

இது முதல் வருடம் என்பதால் அந்தந்த மாநில அணிக்காகவே வீரர்கள் விளையாடிக்கொள்ளலாம் என்றார். இது போல் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உதவிபுரியவேண்டும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கிரிக்கெட் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது மகனுக்கு வாய்ப்புத்தேடி கொண்டிருந்த வேளையில் தனக்கு வாய்ப்புக் கிடைத்ததை நினைத்து சந்தோசப்படுவதாகவும் லட்சுமணன் தெரிவித்தார் . மேலும் என்னை போன்று உள்ளவர்களுக்கு ஊனம் மற்றும் வயது ஒருதடையே இல்லை விடாமுயற்சியை நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் எனவும் தெரிவிக்கின்றார்.

மேலும் இவர் தமிழக அணிக்கு தேர்வுக்கு செல்ல ஊன்றுக்கோலாய் இருந்த சுவாமி கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இவரது விடாமுயற்சி மற்றும் ஆர்வத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை போல மாற்றுத் திறனாளிகள் தங்களது திறமையை வெளிக்காட்டி தங்களது லட்சியத்தை நிறைவேற்ற, துவண்டுகிடக்காமல் வெளியே வரவேண்டும் என்பதே லட்சுமணனின் சம்பவம் எதிரொலிக்கிறது.

Views: - 46

0

0