மக்கள் எதிர்க்கும் திட்டங்களை தமிழக அரசும் எதிர்க்கும் : அமைச்சர் ஜெயக்குமார்..!!

12 September 2020, 1:33 pm
Jayakumar 01 updatenews360
Quick Share

சென்னை : மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு அதிமுக என்றும் பச்சைகொடி காட்டும் என்றும், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் திட்டங்களை அரசு எதிர்க்கும் இது தான் தமிழக அரசின் நிலைப்பாடு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ வளாகத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மாநில அலுவகத்தினை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது :- ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஊரக புத்தாக்க திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் தான் அதிவேகமாக இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு விபத்துகளை உண்டாக்கும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது :- டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறது தமிழக அரசு. அதற்கான தெளிவான அரசாணையை தற்போது வெளியீட்டு இருக்கிறார்கள். எனவே, அரசு வகுத்துள்ள வரையறைக்கு உட்பட்டு உள்ள நிறுவனங்கள் மட்டும் தான் அங்கு துவங்க முடியும். எனவே அதுகுறித்து அச்சப்பட தேவையில்லை.

அதேபோல் மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு அதிமுக என்றும் பச்சைகொடி காட்டும். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் திட்டங்களை அரசு எதிர்க்கும் இது தான் தமிழக அரசின் நிலைப்பாடு, எனக் குறிப்பட்டுள்ளார்.

Views: - 8

0

0