அரசு கலை கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

9 October 2020, 5:59 pm
k-p-anbalagan - updatenews360
Quick Share

சென்னை : தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து பிற ஆண்டு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசும் அனுமதி வழங்கிய நிலையில், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த தமிழக அரசு அனுமதியளித்தது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், “
நாளை முதல் வரும் 20ம் தேதி வரை www.tngasapg.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.60 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பட்டியலினத்தவர்கள் ரூ. 2 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

சான்றிதழ்களை வரும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு www.tngasapg.in மற்றும் www.tngasapg.org என்ற இணையதளத்தை அணுகலாம்,” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0