‘சுந்தரா டிராவல்ஸ்‘ ரேஞ்சுக்கு மாறிய அரசுப் பேருந்து : கியருக்கு பதில் இரும்பு குழாய்.. திருப்பூரில் அவலம்!!!

Author: Udayachandran
30 July 2021, 8:36 pm
Sundara Travels Bus --Updatenews360
Quick Share

திருப்பூர் – குமுளி செல்லும் தொலைதூர அரசு பேருந்தை கியர் ராடுக்கு பதிலாக இரும்பு குழாயை பொருத்தி இயக்கிய அவலம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு, அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் பணிமனைக்கு உட்பட்ட TN 39N 0339 என்ற எண் கொண்ட, அரசுப் பேருந்து குமுளி- திருப்பூர் வரை நாள்தோறும் வந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பேருந்தின் கியர் ராடு பழுதடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து கியர் ராடுக்கு பதிலாக, இரும்பு குழாயை பொருத்தி, ஓட்டுநர் பேருந்தை இயக்கி வருவதாக தெரிகிறது. மேலும், கடந்த 15 நாட்களாக இரும்பு குழாயை பொருத்தி தான் ஓட்டுநர்கள் இந்த பேருந்தை இயக்கியதாக வருவதாகவும் கூறப்படுகிறது.

திருப்பூரில் பொது போக்குவரத்தான அரசுப் பேருந்தை நம்பிதான் ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். இதுபோன்று பராமரிக்கப்படாமல் இருக்கும், தொலைதூரம் பயணிக்கக்கூடிய பழைய அரசுப் பேருந்துகளை மாற்றி புதிய அரசு பேருந்துகளை விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து திருப்பூர் போக்குவரத்து கழக மேலாளர் (வணிகம்) ஆறுமுகம் கூறுகையில் சம்பந்தப்பட்ட பேருந்துக்கான கியர்ராடு நாப்பை யாரோ கழற்றி விட்டாதாகவும், அதனால் ஓட்டுனர் நீளமான குழாயை மாட்டி இயக்கி வந்துள்ளார். அதனை சரி செய்ய பேருந்தை பணிமனைக்கு கொண்டு சென்றுள்ளோம் என்று கூறினார்.

Views: - 389

0

0