தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் ஸ்டிரைக் : பொதுமக்கள் அவதி!!!

25 February 2021, 8:52 am
Govt Bus strike - Updatenews360
Quick Share

தமிழகம் முழுவதும் அரசு பேருந்து போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

14வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற கோரி போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தமிழகம் முழுவமும் அரசு பேருந்து போக்குவரத்து சேவை குறைந்துள்ளதாக பொதுமக்கள் அதியுற்றுள்ளனர். தொமுக, சிஐடியூ, ஏஐடியுசி உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிலுலைத்தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழக அரசு பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டளனர். வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் போக்குவரத்து ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போராட்டத்தை கைவிட வேண்டும் என போக்குவரத்து துறை எம்ஆர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். வழக்கத்தை விட குறைவான போக்குவரத்து இயக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Views: - 11

0

0