முதலமைச்சரிடம் 2 சவரன் நகையை நிவாரணமாக அளித்த பெண்ணுக்கு அரசுப் பணி : பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர்!!

15 June 2021, 5:37 pm
Stalin Govt job To Lady- Updatenews360
Quick Share

மேட்டூர் அணையை திறக்க சென்ற முதல்வர் ஸ்டாலினிடம், கொரோனா நிவாரணமாக 2 பவுன் நகையை தந்த சௌமியா என்ற பெண்ணுக்கு, அரசுப் பணிக்கான ஆணையை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கியுள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 12ஆம் தேதி மலர்தூவி திறந்து வைத்தார். அந்த நிகழ்வின் போது, சௌமியா என்ற இளம்பெண் கொரோனா நிவாரண நிதிக்கு தனது 2 சவரன் செயினை அளித்தார்.

மேலம் வேலைவாய்ப்பு கேட்டு ஒரு கடிதத்தையும் முதலமைச்சரிடம் கொடுத்தார். இதனையடுத்து அந்த பெண்ணிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில் “மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,சௌமியாவுக்கு அரசு வேலைக்கான பணிநியமன ஆணையை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று வழங்கியுள்ளார். குடும்ப சூழ்நிலையில் தாயை இழந்து தவித்து வந்த பெண்ணுக்கு பணி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 79

0

0