அரசு மதுபான கடைகளில் இனி ‘கள்‘ விற்பனை? கோரிக்கையை ஏற்பாரா முதலமைச்சர்!!

12 February 2021, 5:57 pm
CM - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : அரசு மதுபான கடைகளில் பனையில் இருந்து இறக்கப்படும் கள்ளையும் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் ஆட்சியர் மூலமாக முதல்வருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

கலப்பை மக்கள் இயக்கத்தலைவரும் திரைப்பட இயக்குனருமான பி.டி. செல்வகுமார் தமது கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் உடலுக்கு கேடு விளைவிக்கும் மதுபானங்களை டாஸ்மாக் கடைகள் மூலமாக விற்பனை செய்யும்போது, மருத்துவர்களாலும் அறிஞர்களாலும் போற்றப்படும் பனையில் இருந்து இறக்கப்படும் கள்ளை டாஸ்மாக் கடைகள் மூலமாக விற்பதில் எந்த விதத்திலும் கேடு விளையப் போவதில்லை.

தமிழகத்தில் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட பனை மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. எனவே பனை இனத்தை பாதுகாக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில், பனையில் இருந்து இறக்கப்படும் கள்ளை டாஸ்மாக் கடைகள் மூலமாக விற்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் மூலமாக மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 1

0

0