WIPRO நிறுவனத்துடன் கைகோர்த்த தமிழக அரசு : இளைஞர்கள், ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan10 August 2021, 3:34 pm
சென்னை : தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜியுடன், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து முதலமைச்சர் விவாதித்தார். அப்போது, கர்நாடகாவில் உள்ள விப்ரோவின், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆசியர்களுக்கு பயிற்சி வழங்குவது போன்று, தமிழகத்திலும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 22 ஆயிரம் பேர் விப்ரோவில் பணியாற்றுகின்றனர்.
இதனால் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.
0
0