பத்திரிகையாளர் போர்வையில் அன்பழகனின் அடாவடி வசூல் : அதிர்ச்சியில் அதிகாரிகள்!!

17 November 2020, 5:31 pm
dmk reporter - updatenews360
Quick Share

மக்கள் செய்தி மையம் என்ற பெயரில் ஒரு போலி பத்திரிகை நடத்தி, அரசு அதிகாரிகளை மிரட்டி வசூல் வேட்டை நடத்தும் அன்பழகன் என்பவரால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் என்று ஓய்வு பெற்ற முதன்மை பொறியாளர் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, அன்பழகனின் அராஜகங்களை புத்தகமாக வெளியிட முயற்சி செய்து வருவதாகவும் அந்த அந்த முதன்மை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- அரசு செயலர்கள், முதன்மை பொறியாளர்கள் மற்றும் உயர் பதவிகளில் உள்ள அரசு தரப்பு அனைத்து அதிகாரிகளை பற்றி அவதூறான செய்திகளை தனது பத்திரிகையில் வெளியிடுவதாகக் கூறி பணம் பறித்து வருகிறார் அன்பழகன். விதிமுறைகளை மீறி கட்டிடங்களுக்கு அப்ரூவல் வாங்குவது, பணம் கொடுக்க இயலாதோர்களுக்கு அவர்களது துறை சார்ந்து தனக்கு தெரிந்தவர்களுக்காக தேவையானவற்றை செய்துக் கொள்வதும் மட்டுமின்றி, அரசு செயலர்கள், முதன்மை பொறியாளர்கள் மற்றும் உயர் பதவிகளில் உள்ள அரசு தரப்பு அனைத்து அதிகாரிகளையும் மிரட்டி மாதந்தோறும் ரூ.25 லட்சம் ரூபாய் வரை கல்லா கட்டுகிறார்.

“நான் பத்திரிகையாளர் சங்கத்தின் பொருளாளர், நான் ஒரு போன் செய்தால் போதும், அனைத்து முன்னணி பத்திரிகைகளிலும் உங்களைப் பற்றிய அவதூறான செய்திகளை வெளியிடுவார்கள்,” என்றும் மிரட்டுகிறார்.

மேலும், பணம் கொடுக்க மறுக்கும் அதிகாரிகளைப் பற்றி ஆதாரமற்ற அவதூறு செய்திகளை தனது பத்திரிகையிலும் வெளியிடுகிறார். இந்த கொள்ளையில் திமுகவைச் சேர்ந்த மூத்த பிரமுகர்களுக்கு பங்கு இருப்பதாகவும், அவர்களை வைத்து மிரட்டித்தான் பணம் பறிக்கிறார் அன்பழகன். மேலும், இவர் எந்தெந்த முறையில் நூதன கொள்ளையடிக்கிறார் என்பது நான் எழுதுப் போகும் புத்தகத்தில் வெளியாகும்.

மேலும், அன்பழகன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்றும், சில மாதங்களுக்கு முன்பு வரை திமுகவில் இருந்ததாகவும், கட்சியிலிருந்தால் பொதுநல வழக்குப் போட்டு ஆட்டைய போட முடியாது என்ற காரணத்தினால் பதவியை ராஜினாமா செய்து, கட்சியிலிருந்து விலகுவது போல் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறிப்பதற்கும், திமுக யாரையெல்லாம் கை காட்டுகிறதோ அவர்களைப் பற்றி அவதூறான செய்திகளைப் பரப்புவதற்கும், திமுகவிடமிருந்து ஒரு பெரிய தொகை இவருக்கு வருகிறது. ஏற்கனவே, இவர் அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்தக் குற்றத்திற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் மீது 12 வழக்குகள் உள்ளன.

மேலும், இவரைப் பற்றி ஆதாரப்பூர்வமாக இன்னும் பல செய்திகளை வெளியிடுவேன், என்று துணிச்சலாக கூறியிருக்கிறார்.

1 thought on “பத்திரிகையாளர் போர்வையில் அன்பழகனின் அடாவடி வசூல் : அதிர்ச்சியில் அதிகாரிகள்!!

Comments are closed.