அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை விநியோகம் : சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்..!!!

Author: Babu Lakshmanan
28 October 2021, 2:28 pm
rotten eggs1 - updatenews360
Quick Share

திருப்பூர் : திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அழுகிய நிலையில் இருந்த முட்டைகளை விநியோகித்த சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், தொற்று பரவல் நாளுக்கு நாள் கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில், நவ., 1ம் தேதி முதல் ஏனைய வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது.

முன்னதாக, ஊரடங்கினால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும், அரசு சார்பில் மதிய உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முட்டை, சுண்டல் உள்ளிட்ட சத்தான உணவுப் பொருட்களை மாணவர்களின் வீடுகளுக்கே வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களும் அதனை பெற்றுச் சென்று வீடுகளில் சமைத்து உண்டு வருகின்றனர்.

இதனிடையே, திருப்பூரில் அரசின் மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகளை வழங்கியதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், மாணவர்களுக்கு அழுகிய முட்டைகளை வழங்கிய விவகாரம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர்.

இந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டைகளை விநியோகித்த சத்துணவு அமைப்பாளர் மகேஷ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Views: - 762

0

0