ரம்மி விளையாட்டை தடை செய்ய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் : மதிமுக இளைஞரணி செயலாளர் கோரிக்கை மனு!!

4 November 2020, 1:27 pm
Cbe MDMK - Updatenews360
Quick Share

கோவை : ரம்மி விளையாட்டு தடை செய்ய அரசுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதிமுக இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தொடர்ந்து தற்கொலைகள் நடைபெற்று வருகிறது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஆந்திர மாநில அரசு கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாக தடை செய்துவிட்டது. மீறி விளையாட்டை நடத்தினால் அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல தற்கொலைகள் இதுவரை நடந்து விட்டது. கோவையிலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆன்லைன் ரம்மிதடை செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 28

0

0