உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசுப் பணி வழங்க வேண்டும் : விஜய் வசந்த் கோரிக்கை!!

15 April 2021, 7:23 pm
vijay VAsanth -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : சரக்கு கப்பல் மோதி இறந்த குளச்சல் பகுதி மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என குமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மங்களூர் கடற்பகுதியில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிங்கப்பூர் கப்பல் மோதி படகு சேதமடைந்த விபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் சேர்ந்த மீனவர்கள் ஹென்லின் அலெக்சாண்டர், தாசன் ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில் அவர்களது உடல் சொந்த ஊர் வந்தடைந்தது. அவர்களது உடலுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் விஜய்வசந்த் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து அவர் இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் மேலும் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்தார்.
இதில் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ பிரின்ஸ், மற்றும் நாகர்கோவில் தொகுதி எம்எல்ஏ சுரேஷ்ராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உடனிருந்தனர்.

Views: - 16

0

0