அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் : திருப்பூரில் 80% பேருந்துகள் ஓடவில்லை!!!

25 February 2021, 2:13 pm
Tirupur Strike - Updatenews360
Quick Share

திருப்பூர் : தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூரில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

14 வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் ஓய்வு பெறும் போக்குவரத்து ஊழியர்களுக்கு உடனடியாக பென்சன் உள்ளிட்ட தொகைகளை திரும்ப அளிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.


இதனையொட்டி திருப்பூரில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், பல்லடம் , காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலை நிலவுவதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் . ஒருசில அரசுப் பேருந்துகளும் தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

Views: - 100

0

0