உதகையில் குடும்பத்துடன் தமிழக ஆளுநர்: குன்னூர் வரை மலை ரயிலில் ஜாலி பயணம்!!

Author: Udhayakumar Raman
17 October 2021, 7:31 pm
Quick Share

நீலகிரி: நீலகிரிக்கு சுற்றுலா சென்றுள்ள தமிழக ஆளுநர் உதகையிலிருந்து குன்னூர் வரை மலை ரயிலில் பயணம் செய்தார்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்று முதல்முறையாக 5 நாள் பயணமாக நேற்று உதகை வந்தார். கோவையில் இருந்து சாலை மார்க்கமாக உதகை வந்த ஆளுநரை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் வரவேற்றனர். இந்த நிலையில் இன்று சுற்றுலா தளங்களான அப்பர் பவானி, அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் பார்வையிட்டார். இதனையடுத்து அவர் உதகை முதல் குன்னூர் இடையே மலை ரயிலில் செய்தனர்.குன்னூர் ரயில் நிலையத்தில் ஆளுநருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் சாலை மார்க்கமாக உதகை புறப்பட்டுச் சென்றார்.ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. உதகையில் உள்ள ராஜ்பவனில், தனது குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுக்க உள்ளதாகவும், உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை குடும்பத்தினருடன் கண்டுகளிப்பார் எனவும் கூறப்படுகிறது.

Views: - 156

0

0