நிறைவேறாத ஆளுநரின் கனவு: முதல்வரிடம் கூறியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆளுநர்

20 June 2021, 10:29 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியின் வருவாயை அதிகரிக்க கனவு திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாகவும் இது குறித்த விரைவில் இத்திட்டம் குறித்து பிரதமரை சந்தித்து தெரிவிப்பேன் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவி ஏற்று 100 நாளில் அவர் செய்த பணிகள் தொடர்பான புத்தகம் வெளியீட்டு துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. புத்தகத்தை வெளியீட்டு பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, மக்கள் எனக்கு கொடுத்த பணியை எப்படி நான் செய்தேன் என்பதற்காக தான் இந்த ரிப்போர்ட் கார்ட் தயார் செய்து வெளியிடப்பட்டுள்ளதாகவும், நான் புதுச்சேரிக்கு வந்தபோது தடுப்பூசி செலுத்துவதில் கடைசி புதுச்சேரி மாநிலமாக இருந்தது.

இன்று 3 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தான் காரணம் என தெரிவித்த தமிழிசை, புதுச்சேரியின் வருமானத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கனவு திட்டத்தை என திட்டத்தை தயாரித்து அதனை முதல்வரிடம கூறியுள்ளேன். இத்திட்டத்தை பிரதரை சந்திக்கும்போது கொடுப்பேன் என்றும் மேலும் சுற்றுலாவை மேம்படுத்தவும், பல துறைகளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும், மூடப்பட்டுள்ள மில்களை திறந்து வேலை வாய்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Views: - 483

0

0