வெற்று காகிதத்தில் கைரேகை பெற்று பாட்டியின் சொத்தை அபகரித்த பேத்தி : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!!

12 November 2020, 7:17 pm
Chennai HC - Updatenews360
Quick Share

வெற்று காகிதத்தில் பாட்டியின் கைரேகை பெற்று சொத்தை ஏமாற்றி பெற்ற பேத்தி மீது நடவடிக்கை எடுக்க கோரிய பாட்டியின் மனு குறித்து விசாரணை நடத்தி இறுதி முடிவெடுக்க திருவள்ளூர் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூரை சேர்நத் சாலம்மாள் என்ற 95 வயது மூதாட்டியிடம் அவரது முதல் பேத்தி லோகநாயகி என்பவர் வெற்று காகிதத்தில் கைரேகைகளை பெற்று தன் பெயருக்கு மாற்றி மோசடி செய்துள்ளார். இதையறிந்த பாட்டி சாலம்மாள், பத்திரப்பதிவை ரத்து செய்து தனது சொத்துகளை மகள் பெயரிலும், இரண்டாவது பேத்தி பெயரில் எழுதி வைத்துள்ளார்.

இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதவம் லோகநாயகி அபகரித்த சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு சட்டத்தின் கீழ் ஆட்சியரிடம் சாலம்மாள் புகார் அளித்தார்.

அந்த புகாரில் கடந்த பிப்ரவரியில் விசாரணை நடத்த ஆட்சியர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் கடந்த ஆகஸ்ட் மாதம் மூதாட்டி சாலம்மாள் புகார் அளித்தார். தொடர்ந்து அதன் மீது நடவடிக்கை எடுக்கபடவில்லை.

இதனால் மீண்டும் தன் புகாரை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுகக ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, இருதரப்பினரையும் அழைத்து அவர்களின் கருத்தை தெரிவிக்க வாய்ப்பளித்தார்.

பின்னர் 4 வாரத்தில் சட்டப்படி இறுதி முடிவெடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Views: - 27

0

0