கிணற்றில் விழுந்த பேரனை காப்பாற்ற சென்ற தாத்தா பலி : சடலத்தை ஒப்படைக்க மறுத்த கிராம மக்கள்!!

17 September 2020, 2:47 pm
Thiruvallur Double Dead - updatenews360
Quick Share

திருவள்ளூர் : வயல் வெளியில் இருந்த கிணற்றில் கல்லூரி மாணவன் தவறி விழுந்த நிலையில் காப்பாற்ற முயன்ற தாத்தாவும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள செஞ்சி அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரோஸ் செட்டியார் குடும்பத்தினர். இவர் தனது வயல்வெளியை பேரன் விக்னேஷ் உள்ளிட்டவர்களுடன் நிலத்தை சீரமைக்கும் போது அங்கிருந்த தரைமட்ட கிணற்றில் விக்னேஷ் 23 (ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்ற மூன்றாமாண்டு மாணவன்) தவறி விழுந்தார்.

அவரது குரலைக் கேட்டு அருகில் இருந்த அவரது தாத்தா ரோஸ் கிணற்றுக்குள் குதித்து பேரனை காப்பாற்ற முயன்றார் இருவருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் தண்ணீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரது சடலத்தையும் கிராமத்தினர் நீண்ட தேடலுக்குப் பின்னர் மீட்டு அஞ்சலி செலுத்தினர்.

பேரனை காப்பாற்ற சென்ற தாத்தா உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை காவல்துறையினர் இருவரது சடலத்தையும் பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க சென்றபோது கிராம மக்கள் போலீசாரை சடலத்தை தர மறுத்து தடுத்தனர்.

பின்னர் அவர்களை சமரசம் செய்த காவல்துறையினர் இருவரது சடலத்தையும் அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 5

0

0