விநாயகர் சதுர்த்தி தடைக்கு பெருகும் எதிர்ப்பு : இந்து இயக்க கூட்டமைப்பினர் மனு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2021, 12:56 pm
Vinayagar Manu - Updatenews360
Quick Share

கோவை : விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கோரி தமிழ்நாடு இந்து இயக்க கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு இந்து இயக்க கூட்டமைப்பினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து சிவ சேனா அமைப்பின் மாநிலச் செயலாளர் முருகன் கூறியதாவது : விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதி கோரி இன்று நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்துள்ளோம்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று இருந்தாலும் கூட, தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. எனவே மத நிகழ்ச்சிகளான கிருஷ்ண ஜெயந்தி விநாயக சவுத்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கக் கூடாது. தமிழக முதல்வர் எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

மனு அளிக்கும் போது விவேகானந்தர் பேரவையின் நிறுவனர் ஜெலேந்திரன், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் செந்தில்குமார்,பாரத் சேனா மாநில செயலாளர் வாசு, அனுமன் சேனா மாநில அமைப்பாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Views: - 184

0

0