பிரபல ரவுடி படப்பை குணாவிற்கு உதவி செய்ததாக காவலர்கள் பணியிட மாற்றம் : சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு

Author: kavin kumar
13 January 2022, 5:37 pm
Quick Share

காஞ்சிபுரம்: பிரபல ஏ பிளஸ் நிலை ரவுடி படப்பை குணாவிற்கு உதவி செய்தது தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான விவகாரத்தில், மூன்று காவல்துறை ஆய்வாளர்களை காவல்துறையின் தெற்கு மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்து, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தொழில் நகரமாக விளங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் அட்டகாசம் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதிகளில் நாளுக்கு நாள் ரவுடிகளின் அட்டகாசம் பெருகி வருகிறது. கடந்த சில மாதங்களாக ரவுடிகள் மாதம்தோறும் தங்களுக்கு ,இவ்வளவு கட்டிக்கொடுக்க வேண்டும் என தங்கள் ஆதரவாளர்கள் மூலம் மிரட்டி பல தொழில் நிறுவனங்களை வேலைசெய்யவிடாமல் தடுத்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன.இந்நிலையில் சென்னை புறநகர் மாவட்டங்களாக உள்ளாகும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ரவுடிகளை ஒதுக்குவதற்கு சிறப்பு தனிப்படைகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சுங்குவார்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் ரவுடி மற்றும் கட்டபஞ்சாயத்து வேலையில் ஈடுபடும் படப்பை குணா என்பவரை கைது செய்வதற்கு காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். படப்பை குணாவின் ஆதரவாளர்களை ஒடுக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த படப்பை குணா திடீரென தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனை அடுத்து அவருடைய ஆதரவாளர்களை கைது செய்யும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.

படப்பை குணாவிற்கு வலது கரமாக செயல்பட்டு வந்த போந்தூர் சிவா என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே வழக்கில் போந்தூர் சேட்டு என்பவரையும் தற்போது தேடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மதுரமங்கலம் இல்லத்தில் படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் இருந்தபொழுது தனிப்படை காவல்துறையினர் வழக்கு விசாரணைக்காக அவரை சுங்கா சத்திரம் காவல் நிலையத்திற்கு கைது செய்து அழைத்து சென்று விசாரஒநடத்தினார். அதன் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் பிரபல ஏ பிளஸ் நிலை ரவுடி படப்பை குணாவிற்கு உதவி செய்தது தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான விவகாரத்தில்,

காஞ்சிபுரம் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த மகேஷ்வரி, ஶ்ரீபெருமந்தூர் ஆய்வாளராக பணியாற்றிய ராஜாங்கம் மற்றும் மணிமங்கலம் ஆய்வாளரான K.V.பாலாஜி ஆகிய மூன்று காவல் ஆய்வாளர்களை தெற்கு மண்டலத்திற்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.படப்பை குணாவிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு அவருக்கு விசுவாசமாக இருந்த காவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் விரைவில் ஏடிஜிபி வெள்ளத்துரை அவர்களின் வளையத்துக்குள் சிக்குவார்கள் என காவல் துறையினர் மத்தியில் பலமாக பேச்சு அடிபடுகின்றதால் பல காவல் அதிகாரிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Views: - 260

0

0