கொரோனா பரவல் எதிரொலி : கிண்டி சிறுவர் பூங்கா மூடல் …!

Author: kavin kumar
16 January 2022, 8:26 pm
Quick Share

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கிண்டி சிறுவர் பூங்கா மூடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் வண்டலூர் பூங்காவில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பூங்காவை ஜனவரி 31ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் மூடப்படுவதாக வன உயிரினக் காப்பாளர் அறிவித்துள்ளார். மேலும் நிலைமையை மதிப்பாய்வு செய்து, அதற்கேற்ப முடிவு எடுத்து திறப்பு தேதி பின் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Views: - 257

0

0