இன்று குஜராத்தில்… நாளை தமிழகத்தில்… குஜராத் தேர்தல் வெற்றியை நடனமாடி கொண்டாடிய கோவை பெண் பாஜக நிர்வாகிகள்!!

Author: Babu Lakshmanan
9 December 2022, 9:39 am
Quick Share

கோவை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு பாஜகவினர் குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றதை இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

குஜராத்தில் பா.ஜ.க வெற்றி பெற்றதை தொடர்ந்து கோவை மாநகர, மாவட்ட பா.ஜ.க சார்பில் வி.கே.கே. மேனன் சாலையில் அமைந்துள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பாஜகவினர் தேசிய மாடல் ஜெயித்தது. இன்றைய ஆட்சி குஜராத்தில் நாளைய ஆட்சி தமிழ்நாட்டில் என முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, நடைபெற்ற கொண்டாட்டத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதேபோல, பாஜக தொண்டர்கள் ஆண், பெண்கள் என அனைவரும் ஜமாப்பிற்கு நடனமாடி தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

Views: - 194

0

0