ஆரம்பித்த துப்பாக்கி கலாச்சாரம் : கேஜிஎப் திரையரங்கில் நடந்த வன்முறை.. இளைஞர் படுகாயம்..!

Author: Rajesh
21 April 2022, 6:42 pm
Quick Share

கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 14-ம் தேதி நாடு முழுவதும் கேஜிஎப் திரைப்படம் வெளியானது. அதிக சண்டை காட்சிகளையும், வன்முறை சீன்களையும் கொண்டுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கர்நாடாகவில் கேஜிஎப் படம் திரையிடப்பட்ட திரையரங்கில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. ஹாவேரி மாவட்டம் சிக்காவி நகரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் தான் இந்த வன்முறை சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் 27 வயதான வசந்தகுமார ஷிவபுரா படுகாயம் அடைந்தார். அவரது வயிறு மற்றும் கால் பகுதியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. தொடர்ந்து அவர் தாலுகா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வெளியான தகவலில் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் ‘குண்டடிப்பட்டவரின் கால் அருகில் இருந்தவர் மீது பட்டதால் ஏற்பட்ட சண்டையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது’ தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 356

0

0