சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த வழக்கு.! திமுக எம்எல்ஏக்கள் 21 பேரின் மனு மீது இன்று தீர்ப்பு .!!

25 August 2020, 10:57 am
DMK 21 MLA - Updatenews360
Quick Share

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த வழக்கு குறித்து திமுக எம்எல்ஏக்கள் 21 பேரின் மனு மீது உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு சென்றதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 21 எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து 21 எம்எல்ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி உரிமை மீறல் நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து தமிழக சட்டப்பேரவை செயலர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு குறித்து கடந்த 14ஆம் தேதி இறுதி விசாரணை மேற்கொண்ட தலைமை நீதிபதி சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் அடங்கிய அமர்வு இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை தலைமை நீதிபதி சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளதாக பரபரப்பு நிலவியுள்ளது.

Views: - 29

0

0