மளிகை கடையில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை: 100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்…உரிமையாளர் கைது..!!
Author: Rajesh28 ஜனவரி 2022, 1:28 மணி
கோவை: டீச்சர்ஸ்காலனி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய மளிகை கடை வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
கோவை ஜி.என் மில்ஸ் பகுதி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (56). அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவலர்கள் பாலசுப்பிரமணியன் மற்றும் சேதுலிங்கம் ஆகியோர் கடையில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் 100 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அமிர்தலிங்கத்தை கைது செய்த துடியலூர் காவல்துறையினர் குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து அமிர்தலிங்க மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
0
0