தமிழகம்

கஸ்தூரிக்கு 2 தனிப்படை.. இசைவாணிக்கு இல்லாதது ஏன்? எச்.ராஜா ஆவேசம்!

கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்த தமிழக காவல்துறை, இசைவாணி மீது இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர்: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பயிலரங்கம், கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (நவ.26) நடைபெற்றது. இதில், பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் எச்.ராஜா கலந்து கொண்டு, வந்திருந்த நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார். இதனையடுத்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “பாஜகவின் உட்கட்சித் தேர்தல் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. கிளைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது, அது 30ஆம் தேதி வரை நடக்கும். டிசம்பர் 1 முதல் நகர், ஒன்றிய கமிட்டிகளுக்கான தேர்தல் நடக்கும். டிசம்பர் 16 முதல் 30 வரை மாவட்டத் தலைவர் உள்ளிட்ட கமிட்டிக்கான தேர்தல் நடக்கும்.

ஜனவரி முதல் வாரத்தில் மாநிலத் தேர்தல், ஜனவரி 15ஆம் தேதிக்குள் தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தை பிறக்கும் போது பாஜகவின் தேசியத் தலைவர் கமிட்டி வரும். அதற்கான பயிலரங்கங்கள் தான் இங்கு நடந்திருக்கிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநில அரசு இதுவரை வெள்ளம் என்றால் சென்னை மட்டும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த மாதம் கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

ஆகவே, எல்லா மாவட்டங்களிலும் கனமழைக்கான எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு, அரசு மீட்பு, நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக கேட்டுக் கொள்கிறது. உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன்.

சமூக வலைத்தளங்களில் இந்து விரோத பதிவுகள் வந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்க விஷயமாகும், அதுவும் கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்து சபரிமலைக்கு மாலை அணிவித்து பக்தர்கள் சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஐயப்பனைப் பற்றி கேலியும், கிண்டலுமாக இசைவாணி, பிறவி இந்து விரோதி ரஞ்சித் போன்றவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், மிக மோசமான சூழ்நிலை வந்து கொண்டிருக்கிறது. பல பேர் என்னிடம் ஐயப்பனைப் பற்றி பேசினால், நான் ஏசப்பனை பற்றி பேசுவேன் என்கிறார்கள். தப்பு, நாம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை, ஏனென்றால் நீ எந்த ஆண்டவனை வணங்கினாலும், அது நாராயணனை போய்ச் சேரும்.

வழிபாடு வேறுபாட்டை, வேறுபாடு என்று கருதாத ஒரு கலாச்சாரத்தை கெடுப்பதற்கு, மத மோதல்களை ஏற்படுத்த சில தீய சக்திகள், இதற்கு பின்னால் கிருஸ்துவ மத தலைவர்கள் இருக்க மாட்டார்கள், கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படை போட்டு பிடித்தவர்கள் தானே இவர்கள். அப்ப ஏன் இந்த இசைவாணியை கைது செய்யவில்லை?

காவல்துறையே இந்து விரோதமாக இருக்கிறதா என்று சந்தேகம் வருகிறது. அரசாங்கம் இந்து விரோதம் என்பது நமக்கு தெரியும். மாநிலத்தின் துணை முதலமைச்சர் சனாதான இந்து மதத்தை டெங்கு கொசு போல், மலேரியா கொசு போல் அழிக்க வேண்டும் எனப் பேசி இருக்கிறார். நாளைக்கு மற்ற மதங்களைப் பற்றி பாட்டு போடுவது, டான்ஸ் ஆடும் சூழ்நிலை வந்தால், தமிழ்நாட்டில் மத மோதல்கள் தான் வரும்.

எது அரசியல் தர்மம் என்றால், பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களுக்கு நீதி வேண்டும் என்கின்ற அரசியல் அமைப்பு இருக்க வேண்டும். இன்றைய அரசு அப்படியா இருக்கிறது? இதுவரை மகாராஷ்டிராவில் 200 தொகுதிகளுக்கு மேல் எந்த கட்சியும் வெற்றி பெற்றது இல்லை.

ஆனால், இன்று 288க்கு 233 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி மகாயுதி எனும் பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கூட்டணிக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. தமிழக பாஜக சார்பில் எங்களுக்கு சத்ரபதி சிவாஜி வேண்டும், ஒளரெங்கசீப் ஆட்சி இல்லை என தீர்ப்பளித்து இருக்கிறார்கள்.

ஏனென்றால், முஸ்லீம் தலைவர்கள் 14 கோரிக்கைகள் வைத்தார்கள், அதனை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. ஆனால், மக்கள் நிராகரித்து இருக்கிறார்கள். மாநில பாஜக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வங்கதேசத்தில் அரசாங்கம் மின்சாரத்திற்கு காசு கொடுக்கவில்லை, அதனால் இவர்கள் மின்சாரத்திற்கான பில்லை கொடுக்கவில்லை என அமெரிக்கா நிர்பந்தப்படுத்தியும், அதானி தயாராக இல்லை.

நீங்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கு பணம் கேட்டார், கொடுக்காததால் வங்கதேசத்திற்கு மின்சாரத்தை நிறுத்தியதால், இது போன்ற ரிப்போர்ட் வந்திக்கு. அதானிக்கு எதிராக அமெரிக்கா கோர்ட்டில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 4 மாநிலங்களில் அதானி இந்த சூரிய மின்சாரத்தை ஒப்பந்தம் வாங்குவதற்காக லஞ்சம் கொடுத்தார் என்பது புகார்.

இதையும் படிங்க: விஜய் அரசியலில் ஹீரோவா இருக்கனும்னா இதச் செய்யனும்.. பார்த்திபன் ஓபன் டாக்!

இதில் தமிழ்நாடு முதலிடம், அடுத்து ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிசா. இதில் பாஜக ஆளும் மாநிலம் இருக்கிறதா என்றால், இல்லை. இதில் தமிழகமும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மாநிலங்களில் பாஜக இல்லை. அதனால் பாஜகவிற்கு எந்த பங்களிப்பும் இல்லை.

அமெரிக்க கோர்ட் என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்பட்டவர் அதானி, பாஜகவை சம்மந்தப்படுத்தி, பிரதமர் வாயைத் திறக்கவில்லை என்பது தேவையற்றது. அதானி மீதான குற்றச்சாட்டுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை” என்றார்.

Hariharasudhan R

Recent Posts

மது போதையில் அத்துமீறல்? திருமணம் ஆன பின்பும் நடிகையை காதலித்த முரளி! அடக்கொடுமையே?

புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…

12 minutes ago

இயக்குநருடன் தனிக்குடித்தனம் நடத்தும் பிரபல நடிகை? வெளியான ரகசியம்!

தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…

39 minutes ago

நீங்கதான் எனக்கு PRECIOUS… தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் கட்டளை!

கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…

1 hour ago

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

15 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

17 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

18 hours ago

This website uses cookies.